மருந்து கடைகளின் வேலை நிறுத்தமும் இனையதள பயன்பாடும்

மருந்து கடைகளின் வேலை நிறுத்தமும் இனையதள பயன்பாடும்
தற்போது பரவலாக பேசப்படும் ஒரு செய்தி ஆன்லைனில் மருந்து விற்பனை பற்றியது தான். ஒரு வாடிக்கையாளர் சார்பாக பார்க்கும் போது இணையதளத்தில்  மருந்து வாங்குவது எளிமையான ஒன்று. நல்ல மருந்தகங்களை தேடி அலையை வேண்டியதில்லை. இதில் இன்னொரு சிறப்பம்சம் பாதுகாப்பானதும், நாம் வாங்கிய மருந்துகளுக்கான ரெக்கார்ட்சும்  நம்மால் பாதுகாத்து கொள்ள முடியும். இதை எந்த இணையதளத்தில் ஆர்டர் செய்தோமோ அந்த இணையத்தில் நமக்கான அக்கொவுண்டில் நம்மால் பாதுகாத்து வைத்துகொள்ள முடியும். ஒருவேளை சம்பந்தபட்ட   இணையத்தளம் தவறான மருந்து கொடுத்தா கூட நிரூபிப்பது எளிது. இதை குறிப்பிடுவதற்கு காரணம் நம்மில் பலர் "இணையத்தில் மருந்து வாங்குவது பாதுகாப்பானது அல்ல" என்று நினைப்பதால் தான்.



பொதுவாக மருந்து வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை, கீழ் உள்ள வீடியோ பார்க்கவும்




மருந்து கடைகளில் மருந்துகளை நிர்வகிப்பதற்கும், பில்லிங் சம்பந்தமான விசயங்களிலும் கணிப்பொறிகளை தான் உபயோகிரோமே  தவிர, எந்த மருந்து கடைகாரரும் கையால் ரசீது போட்டு தருவது இல்லை. அப்படி கொடுத்தால் நம்மில் பலபேர் அந்த கடைக்கே போகமாட்டோம். அதனால் டெக்னாலஜி வசதிகள் இருக்கும் போது அதை பயன்படுத்த தயக்கம் இருக்க கூடாது.  இணையத்தில் மருந்து விற்பனை செய்ய இவர்கள்  எதிர்பதற்கு காரணமே இணையதளத்தால் இவர்கள் தொழில் பாதிக்கும் என்பதே. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை.  இதை சமாளிப்பதற்கு எளிமையான வழி மருத்து கடைகாரர்களும் அவர்களுக்கான இணையதளத்தை தொடங்குவது தான். நீங்கள் ஐந்து லட்ச ரூபாய் முதல் போட்டு ஒரு மருந்து கடை ஆரம்பிக்கும் போது சில நுறு ரூபாய்களில் உங்களுக்காக ஒரு இனைய தளத்தை தொடங்கி விற்பனையை அதிகரிக்க முடியும்.

மருந்து கடைகளுக்கான இணையதளம் தொடங்க எவ்வளவு செலவு ஆகும் ?



நம்மில் பலர் ஒரு மருந்து கடைகளுக்கான  இணையதளம் தொடங்க  10,000 இருந்து 50,000 வரை ஆகும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் நான் இங்கு குறிப்பிடும் இணையத்தளம் உங்களுக்கான ஒரு ஈகாமர்ஸ்  இணையதளத்தை 100 ரூபாய்க்கு வடிவமைத்து தருகிறார்கள். இணையதளத்தோட லிங்க் இங்கே.  இதில் வருத்தமான செய்தி என்னன்னா மருத்து கடைகள் மருந்துகளை இணையதளத்தில் விற்பனை செய்ய கூடாதுன்னு போராட்டம் பண்றாங்களோ அதே மாதிரி தான் இந்த இணையதள நிறுவனமும் ஒரு விசயத்துக்காக போராடிகிட்டு இருக்கு. அது "இந்தியா பெமெண்ட் கேட்வே அப்ருவல்".


ஈகாமர்ஸ் இணையதளங்களில் இது முக்கியமான விஷயம். அதாவது நீகள் ஒரு பொருளை இணையத்தில் வாங்கும் போது உங்கள் கிரெடிட் கார்டு , டெபிட் கார்டு அல்லது ஆன்லைன் பேங்க் அக்கௌண்ட் உடாக பணம் சம்பந்த பட்ட இணையதளத்துக்கு செலுத்துவீர்கள். இந்த செட்டப், இந்த குறிப்பிட்ட செயலை சம்பந்த பட்ட இணையத்தளம் மட்டும் தனிச்சையாக செய்ய முடியாது. அதாவது பணத்தை வடிக்கையாளரிடம்    இருந்து பணத்தை இணையதளம் பெறமுடியாது. இதற்கு தான் பெமெண்ட் கேட்வே கம்பெனீஸ்.  இது பல ஆயிரம் கோடி ருபாய் புழல்கிற ஒரு மிடில் மென் நிறுவனம். இவர்களோட வேலையே ஒரு இணையத்தளம் விற்பனை செய்யும் பொருளுக்காக வடிக்கையாளரிடம்  பணத்தை பெற்று  ஒன்று அல்லது ரெண்டு நாட்களுக்கு பிறகு சம்பந்த பட்ட இணையதள நிறுவனத்திற்கு பணத்தை ட்ரான்ஸ்பேர் செய்யும். சில பெமெண்ட் கேட்வே கம்பெனீ வாரம் ஒரு முறை கூட பணத்தை ட்ரான்ஸ்பேர் செய்யும் வழக்கத்தை வைத்து உள்ளது. இவர்கள் தயவு இல்லாமல் யாரும் எந்த பொருளையும் இணையத்தில் விற்பனை செய்ய முடியாது.  இவர்கள் இணையதளங்களை   விற்பனை செய்ய அனுமதிப்பதே பல பேருக்கு வேதனையான விஷயம். பண பலத்தின் அடிப்படையில அல்லது அரசியல் செல்வாக்கு அடிப்படைலையா இதுவே பல புதிய இணையதள நிறுவனங்களுக்கு பெரிய கஷ்டம். ஹெல்ப் டீளிங்க்ஸ் சிக்கலில் இருப்பது இங்குதான்.

எனக்கு ஹெல்ப்டீளிங்க்ஸ் இணையதளம் செய்வது பாராட்டத்தக்க விசயமா தான் தெரியுது. ஆனாலும் இத்தனை மாசம் இதுக்காக (பெமெண்ட் கேட்வே அப்ருவல்) காத்து இருக்கணுமான்னு நினைக்கும் போது "அட போங்கடா.." ன்ற நினைப்பு தான் தோணுது. கீழ உள்ள வீடியோக்களை பாருங்க, நீங்களும் அப்படிதான் உணருவிங்க.





இந்த கட்டுரையோட நோக்கமே குறைந்த விலையில் நீங்கள் எப்படி உங்களுக்காக ஒரு இணையதளத்தை உருவாக்கி கொள்வது பற்றியது தான். ஹெல்ப் டிளிங்க்ஸ் நீங்களும் இணையதளத்தை உருவாக்கலாம். உங்களுக்கு நண்பர்கள் யாரேனும் வெளிநாடுகளில் இருந்தால் அவர்கள் உடாக ஆர்டர் செய்து கொள்ளலாம். இன்னொரு ஆப்சன், பைவர்.காம், இதை பற்றி நெக்ஸ்ட் போஸ்ட்ல கொஞ்சம் தகவல்கள் எனக்கு தெரிஞ்சத எழுதுறேன். ரொம்ப நாள் (மாதங்களே இருக்கும் ) இந்த போஸ்ட் போட்டு இருக்கேன், தவறுகளுக்கு மன்னிக்கவும், உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ப்ளீஸ். நெக்ஸ்ட் போஸ்ட்ல அப்டேட்  செய்துக்கிறேன் சார் ! :)
Read More

Get more visitors for your blog from all Indian Social bookmarking sites

Get more visitors for your blog from all Indian Social bookmarking sites

Are you want to increase your website / blog traffic? Just install this free Add-India widget on your blog/ website, Then u can easily submit more than 20 top Indian Social bookmarking sites.

Indian bookmarking sites give more visitors than if we submit our articles on reddit.com or digg ..etc naturally.

See my blog side bar, U can easily submit all indian social bookmarking sites on web from this button. This will give us a good result and valuable visitors and traffic. U can submit not only india English contents , here they listed nearly 11 indian languages, and their top bookmarking sites on particular indian regional language (Hindi, tamil, bangali, marathi..etc)


Install Add-India widget from http://www.findindia.net

Read More